Banner 468 x 60px

 

Monday, November 24, 2014

கிரகங்களும் ஜாதகரின் கல்வி நிலையும்

0 Facebook
மேதைகளையும் ,கணிதவல்லுனர்களையும் தர்க்கவாதிகளையும் பேச்சாளர்களையும் மருத்துவர்களையும் ,பொறியாளர்களையும் ஜோதிடர்களையும் ,நடனம்,நாடகம்,நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்தா வித்யா காரகன் புதனே யாவார்

பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :-

லக்னத்தில் - 1st

 சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் ,  ஆசாரமுடையவராகவும்
 புதன்  இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
 குரு   இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
 சனி   இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .

இரண்டாமிடத்தில் - 2nd Level

 சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
 புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
 குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.

மூன்றாமிடத்தில்- 3rd Level

 புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
 குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
 சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் ,    சனிபலம் பெற - ஞானம் உண்டு .
 கேது இருக்க ஞானம் , வித்தை யுடையவனாகவும் இருப்பர் .

ஐந்தில்- 5th Level

  சந்திரனிருக்க நற்ப்புதியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
  புதனிருக்க ஞானவிருத்தி , நர்கல்வியாலனாகவும் .
  குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .

ஒன்பதில் -

  புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
 குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .

  பத்தில் -

  புதனிருக்க ஞானியாகவும் ,
  கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .

பனிரெண்டில் -

குரு இருக்க புத்திசாலியாகவும்
கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .

பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-


லக்னாதிபதி பலம்பெற்று 2 ல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார்

லக்னாதிபதி 4 ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் .

இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் .

இரண்டாம் அதிபதி முன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க இல்லாதவனாகவும் இருப்பான் .

இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் சாஸ்திர ஆராயிச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான்

முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம்  நாட்டியம்,சங்கிதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் .

நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் .

ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் .

ஐந்தாமதிபதி 4 ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும்.

ஐந்தாமதிபதி 5 ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் .

ஐந்தாமதிபதி 6 ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் .

ஐந்தாமதிபதி 9 ல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு .

பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் .

பத்தாமதிபதி 2 ல் (பலம்) வாக்குவன்மை , பேசுந்திரன் இருக்கும் .

பத்தாமதிபதி 5 ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் .

பன்னிரெண்டாம் அதிபதி 2 ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .

The educational level of the planets jatakar

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini