Banner 468 x 60px

 

Tuesday, November 25, 2014

கார்த்திகை - மாத ராசி பலன் (17.11.2014 - 15.12.2014) துலாம்:

0 Facebook
எவ்வளவு சிரமம் வந்தாலும் அதை தூசாகக் கருதும் துலாம் ராசி அன்பர்களே!

குரு 10-ம் இடத்தில் இருந்து 11-ம் இடத்துக்கு செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை. குரு சாதகமான இடத்திற்கு வந் துவிட்டதால் பொருளாதார வளம் மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் கூடிவரும். சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். மதிப்பு, மரியாதை கூடும். செவ்வாய் நவ. 22வரை நன்மை தருவார்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் புதனால் சிற்சில பிரச்னை வரலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். டிச.7க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் இருக்கும். இடமாற்ற பீதி மறையும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். டிசம்பர்1,2ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நவம்பர் 21க்கு பிறகு, போட்டிய õளர்களால் இடையூறு வரலாம்.டிச. 8க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரிய õக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பலபெற்று புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெற முடியாது. மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் நவம்பர் 22க்குள் வாங்கவும்.

பெண்கள் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டி இருக்கும். நவ. 25,26ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். சிலருக்கு விருந்து, விழா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை. உடல்நலத்தில் கண் தொடர்பான பிரச்னை வரலாம்.

நல்ல நாள்: நவ. 20, 21, 25, 26, 17, டிச.1, 2, 3, 4, 10, 11, 12, 13, 14.

கவன நாள்: டிச. 5, 6, 7 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini