Banner 468 x 60px

 

Tuesday, November 25, 2014

கார்த்திகை - மாத ராசி பலன் (17.11.2014 - 15.12.2014)

0 Facebook
நட்புணர்வுடன் பழகிடும் மேஷ ராசி அன்பர்களே!

குரு டிச.3-ல்  4- ல் இருந்து விலகி 5-ம் இடமான சிம்மத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிற ப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் நவ.21-ல் இருந்து டிச. 8- வரை நற்பலன் அளிப்பார். சுக்கிரன் டிச. 7- வரை நற்பலனை வழங்குவார். ராகு மாதம் முழுவதும் நல்லதே நடக்கும். உடல்நலம் சீராக இருக்கும். நவ. 22க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்ப பிரச்னை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலகும். நவ. 21-க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்காமல் போகலாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். நவ. 22 க்கு பிறகு போட்டியாளர் களால் பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை, அலைச்சல் இருக்கும். நவ. 21-க்கு பிறகு சக ஊழியர்கள் உதவியாக இருப்பர். கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.

அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலனைக் காண்பர். கிடைக்க வேண்டிய புகழ் தட்டி பறிக்கபடலாம்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண வாய்ப்புண்டு. ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பு கிடைக்கும்.

நல்ல நாள்: நவ. 18, 19, 20, 21, 27, 28, 29, 30, டிச. 3, 4, 8, 9, 15

கவன நாள்: நவ. 22, 23, 24 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 4, 7 நிறம்: வெள்ளை, நீலம்

வழிபாடு: சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சூரியனை காலையில் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini