Banner 468 x 60px

 

Tuesday, November 25, 2014

கார்த்திகை - மாத ராசி பலன் (17.11.2014 - 15.12.2014) விருச்சிகம்:

0 Facebook
நினைத்ததை சாதித்தே தீருவது என்பதில் தீவிரமாய் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

குரு டிச. 3ல் 9-ம் இடத்தில்இருந்து விலகி 10-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். ஆனால், அவரது 5-ம் இடத்துப் பார்வை மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.கடந்த மாதம் போல் நன்மைகள் இந்த மாதமும் கிடைக்கும். ராகு, சுக்கிரனின் நற்பலன் தொடரும். செவ்வாய் நவ. 22ல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். பக்தி உயர்வு மேம்படும். ராகுவின் பலத்தால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கண்டாலும், சோர்வும் அலைச்சலும் உங்களை பாடாய்படுத்தும். பொருளாதார வளம் சிறப்படையும். குடும்பத்தில்பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ. 21க்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நவ. 21க்கு பிறகு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் உழைப்புக்கேற்ற லாபம் காணலாம். டிச. 3,4ல் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. நவ. 20,21,25,26 பொருள் விரயம் ஏற்படலாம். டிச. 7க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும், நல்ல வசதிகளையும் பெறலாம். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைத்தால் தான் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். கால்நடைச் செல்வம் சிறப்படையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நவம்பர் 22க்கு பிறகு கைகூடும்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புத்தாடை, நகை வாங்கலாம். சூரியனால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

நல்ல நாள்: நவ.17, 18, 19, 22, 23, 24, 27, 28, டிச. 3, 4, 5, 6, 7, 12, 13, 14, 15.

கவன நாள்: டிச 8, 9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8 நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: சனிபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். நவ. 22 வரை செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini