Banner 468 x 60px

 

Tuesday, November 25, 2014

கார்த்திகை - மாத ராசி பலன் (17.11.2014 - 15.12.2014) மிதுனம்:

0 Facebook
பண்புடன் பழகி மகிழும் மிதுன ராசி அன்பர்களே!

குரு டிச. 3ல் 3-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்வது சிறப்பானது அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் பார்வை சாதகமாக உள்ளன. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். எந்த இடையூறையும் அவரது பார்வை பலம் உடைத்தெறியும். புதன் நவ. 21 ல் இருந்து டிச. 7 வரை நன்மை தருவார். அதன்பின் சாதகமற்ற நிலைக்கு சென்று விட்டாலும் பாதிப்பு அதிகம் ஏற்படாது. புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார வளம் கூடும். குடும்பத்தில் தேவை பூர்த்தியாகும். நவ. 21 க்கு பிறகு தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சி கைகூட வாய்ப்புண்டாகும். உடல் நிலை அவ்வப்போது அதிருப்தி அளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேர்ந்தா லும், ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். அதிகாரிகளின் ஆதரவு சீராக கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள் டிச.7 வரை முயற்சியில் தடைகளைச் சந்திப்பர். அதன் பிறகு புதிய ஒப்பந்தமும், வருமானமும் கிடைக்கும்.

பெண்கள் வகையில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு கவனம். அரசியல்வாதிகள் மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்துவர்.

மாணவர்கள் நவ. 21க்கு பிறகு கல்வியில் சிறந்த நிலை பெறுவர். ஆசிரியர் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கை கூடாமல் போகலாம். பெண்கள் உறவினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். டிசம்பர் 7-ந் தேதிக்கு பிறகு கணவனிடம் விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு சந்தோஷம் அளிக்கும்.

நல்ல நாள்: நவ. 17, 22, 23, 24, 25, 26, டிச.1, 2, 3, 4, 8, 9, 12, 13, 14

கவன நாள்: நவ. 27, 28 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3, 9. நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட தவறாதீர்கள். மாரியம்மன் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini