பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28
நற்காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரம் இது. பொருள்வரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் கூடிவரும்.
வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். 13ம் தேதி முதல் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
17ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தெய்வ காரியங்கள் நிறைவேறும்.
20ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும். 22ம் தேதி முதல் புதிய சொத்துக்களும் சேரும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம்.
1ம் தேதி பிறந்தவர்களுக்கு: 17ம் தேதி முதல் வெற்றிவாய்ப்புக்கள் அதிகரிக்கும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
10ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல்நலனில் கவனம் தேவைப்படும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும்.
19ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். செல்வ நிலை உயரும்.
28ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிரிகளை பக்குவமாகச் சமாளிக்கவும். பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 13, 19, 21.
பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29
புதியவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு
ஆதரவாக இருப்பார்கள். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
பெற்றோரால் சிறு சங்கடம் ஏற்படும். அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். 13ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். 17ம் தேதி முதல் மக்களால் நலம் ஏற்படும். 20ம் தேதி முதல் சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை.
22ம் தேதி முதல் புதிய முயற்சிகள் கைகூடும். பகுதி நேர உத்தியோகம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
2ம் தேதி பிறந்தவர்களுக்கு: துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள்.
11ம் தேதி பிறந்தவர்களுக்கு: 17ம் தேதி முதல் வெற்றிகள் குவியும். பணவரவு அதிகமாகும்.
20ம் தேதி பிறந்தவர்களுக்கு: புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் நலம் உண்டாகும்.
29ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்துணிவு கூடும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 18, 19, 20, 24.
பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30
உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும் நேரமிது. பிறரால் போற்றப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புத்திசாலித்தனம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். சுப காரியங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும்.
வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 17ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும். மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும்.
3ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
12ம் தேதி பிறந்தவர்களுக்கு: 17ம் தேதி முதல் விசேஷமான நன்மைகள் ஏற்படும். மக்களால் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறை லாபம் தரும்.
21ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.
30ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் ஏற்படும். வீண் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 12, 13, 18, 19, 21.
பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31
பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும் நேரம் இது. ஜலப்பொருட்கள் லாபம் கொண்டுவரும். உங்களைக்காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்ப நலம் சிறக்கும். கலைஞானம் பளிச்சிடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் கடல் வாணிபம் செய்பவர்களும் வளர்ச்சி காண்பார்கள்.
சிந்தனையில் தெளிவு உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். 17ம் தேதி முதல் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறன் கூடும்.
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். ஆசிரியர்களது நிலை உயரும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிட்டுவதுடன், செல்வாக்கும் அதிகரிக்கும்.
தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். 20ம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 22ம் தேதி முதல் மக்களால் மன அமைதி குறையும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
4ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஆதாயம் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். கற்பனை வளம் பெருகும்.
13ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர் பொறுப்புக்கள் தேடிவரும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
22ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வ நிலை உயரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.
31ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் பெருகும். எதிரிகள் அடங்குவார்கள். 17ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 13, 19, 21.
பிறந்த தேதிகள்: 5, 14, 23
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நூதன பொருட்களின் சேர்க்கை நிகழும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் உருவாகும். கலைஞானம் பிரகாசிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மாதர்களது எண்ணம் ஈடேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். நல்லவர் அல்லாதவர்களது தொடர்பை விட்டு விலகுவது நல்லது. 20ம் தேதி முதல் எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். வீண்வம்பு வேண்டாம். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனத்தெளிவும் பிறக்கும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 22ம் தேதி முதல் சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு.துணிச்சல் கூடும். போட்டிகளில் வெற்றி பெற வழி பிறக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையாட்களிடம் எச்சரிக்கை தேவை.
5ம் தேதி பிறந்தவர்களுக்கு: பயணத்தால் நலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மன உற்சாகம் பெருகும்.
14ம் தேதி பிறந்தவர்களுக்கு: வீண் செலவுகள் ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். 17ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். நல்லோர் தொடர்பால் நலம் ஏற்படும்.
23ம் தேதி பிறந்தவர்களுக்கு: புத்திசாலித்தனம் பிரகாசிக்கும். வியாபார நுணுக்கம் தெரியவரும். 20ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 12, 21, 24.
பிறந்த தேதிகள்: 6, 15, 24
உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும் நேரமிது. புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 13ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். பெரியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தர்ம சிந்தனை வளரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் லாபம் தரும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 22ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய சொத்துக்களின் சேர்க்கை நிகழும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். போட்டிப் பந்தயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறலாம். உயர் பொறுப்புக்கள் வந்து சேரும்.
6ம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
15ம் தேதி பிறந்தவர்களுக்கு: 17ம் தேதி முதல் சுபிட்சம் கூடும். அறிவாற்றல் வெளிப்படும். தொழில் நுட்பத்திறமை பளிச்சிடும்.
24ம் தேதி பிறந்தவர்களுக்கு: தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 18, 21, 24.
பிறந்த தேதிகள்: 7, 16, 25
உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும் நேரம் இது. மக்களாலும் உடன் பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். எதிரிகள் ஏமாந்துபோவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. 22ம் தேதி முதல் பொருளாதார நிலையில் விசேஷமான வளர்ச்சியைக் காணலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும்.
சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலமான சூழ்நிலை நிலவும்.
உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், வங்கிப் பணியாளர்கள் சேமிப்பு நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். நல்லோர் தொடர்பு நலம் கூட்டும்.
7ம் தேதி பிறந்தவர்களுக்கு: கற்பனை ஆற்றல் கூடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் பெருகும்.
16ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்கள் இருக்கும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 17ம் தேதி முதல் அனைத்து வகைகளிலும் நல்ல திருப்பம் உண்டாகும்.
25ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஞான மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
சொத்துக்கள் சேரும். மன உறுதி உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 12, 18, 24.
பிறந்த தேதிகள்: 8, 17, 26
உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும் நேரம் இது. பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள்.
மக்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 13ம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். முகப்பொலிவு உண்டாகும்.
கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.
20ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். மகான்கள் சாதுக்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளும் கிட்டும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். கனவுகள் தொல்லை தரும்.
அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
8ம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். சொத்துக்கள் சேரும். உயர்பதவி, பட்டங்கள், பாராட்டுகள், பரிசுகள் கிடைக்கும். பொதுஜனத் தொடர்பு பயன்படும்.
17ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
26ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 13, 21, 24.
பிறந்த தேதிகள்: 9, 18, 27
உங்கள் தோற்றப்பொலிவு கூடும் நேரம் இது. எதிரிகள் விலகுவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். போட்டிப் பந்தயங்களில் ஈடுபாடு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.
மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். 22ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும்.
பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் பல ஆற்றும் நேரம் இது. செந்நிறப் பொருட்கள், கட்டடப் பொருட்கள், மின்சாதனங்கள், எரிபொருட்கள் ஆகியவை லாபம் தரும். உடன்பிறந்தவர்களது நிலை உயரும்.
பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைத்துவரும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
9ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன உறுதி கூடும். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். சொத்துக்கள் சேரும்.
18ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல்நலனில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள். 17ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும்.
27ம் தேதி பிறந்தவர்களுக்கு: புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மதிப்பு உயரும். சாதுக்கள், மகான்களது தரிசனம் கிடைக்கும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 12, 18, 21, 24.
‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி
0 Facebook:
Post a Comment