Banner 468 x 60px

 

Tuesday, November 25, 2014

கார்த்திகை - மாத ராசி பலன் (17.11.2014 - 15.12.2014) தனுசு:

0 Facebook
சாமர்த்தியமாக பேசியே காரியம் சாதித்து விடும் தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ஆட்சி நாயகனான குரு டிச. 3ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம்நடக்க வாய்ப்பு உண்டு. சனியும் சாதக பலனை கொடுப்பார். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். நவ. 18,19ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். நவம்பர் 22க்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். டிச.8க்கு பிறகு டிரான்ஸ்பர் எதிர்பார்க்கலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மாதத் தொடக்கத்தில் போட்டி இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். நவ. 22க்கு பிறகு போட்டி கூடும். பொருள் களவு போகலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. டிசம்பர் 5,6,7ல் எதிர் பாராத வகையில் பணவரவு இருக்கும். நவம்பர் 22,23,24,27,28ல் பொருள் விரயம், ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு டிச.7 க்கு பிறகு பொருள் சேரும். புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் அறிவுரைமூலம் முன்னேற வழிகாண வேண்டும். விவசாயிகளுக்கு கடும் உழைப்பின் பேரில் பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டி இருக்கும்.

நல்ல நாள்: நவ. 18, 19, 20, 21, 25, 26, 29, 30, டிச. 5, 6, 7, 8, 9, 15.

கவனநாள்: டிச. 10, 11 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3, 5 நிறம்: மஞ்சள் , கருப்பு

வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். முருகனை வணங்குங்கள். சிவ வழிபாடு சிரமங்களைப் போக்கி மன தைரியத்தை வரவழைக்கும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini