Banner 468 x 60px

 

Sunday, December 7, 2014

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

0 Facebook


ஆதிக்க எண்: 1
 ஆதிக்க கிரகம்: சூரியன்
ஆண்மையின் கம்பீரமும் பெண்மையின் கனிவும் பெற்று இருக்கும் இவர்கள், அன்புமிக்க இதயம் உடையவர்கள். இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் ஆண்கள், ஒரு விஷயத்தைப் பற்றிப் பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று மிகச் சரியாக யூகித்துக் கூறிவிடுவார்கள். பெண்களாக இருந்தால், ஆண்களின் மனதைப் படித்துவிடு வார்கள். நல்ல நிர்வாக சக்தி இருக்கும். மிகுந்த தன்னம்பிக்கை, ஊக்கம், உற்சாகம் உடையவர்கள் இவர்கள். பிறர் கூறும் யோசனைகளை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள்.
தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது மற்றவர்கள்தான் என்பது இவர்களின் எண்ணமாக இருக்கும். புகழையும், பதவியையும் விரும்புவார்கள். ஆணும் சரி, பெண்ணும் சரி... ஒருவர் மற்றவரிடம் ஆழ்ந்த நட்பை விரும்புவார். அதே நேரத்தில், மேன்மையான உணர்ச்சிகளுடனே மற்ற இனத்தவரிடம் பழகுவார். பிறர் தன்னைப் பின்பற்றவேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் தன் கருத்துப்படியே நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
மேலான லட்சியங்களுக்காக, தானாகவே அநேக கஷ்டங்களுக்கு வலிய ஆளாவார்கள். இவர்களில் சிலர் தீவிரவாதிகளாக இருந்தாலும், இளகிய மனம் கொண்டவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இவர்கள் இலக்கியங்களிலும் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
  ஆதிக்க எண்: 2
 ஆதிக்க கிரகம்: சந்திரன்
கலைத்துறையில் பெயரும் புகழும் பெற்றுத் திகழ்வர். பல கலைகளைக் கற்று வைத்திருப்பார்கள். சகலகலா வல்லவர்களாகத் திகழ்வார்கள். முன்னேறவேண்டும் என்பதில் அதிக ஆர்வமிருக்கும். உலக மக்களுக்கு நன்மை செய்யப் பாடுபடுவார்கள்.
தாய்ப் பாசம், தாய்நாட்டுப் பற்று, குடும்பப் பற்று அதிகம் உள்ளவர்கள் இவர்கள். தன்னை நம்பியவர்களைக் காப்பர். தன்மானம் காப்பதில் நிகரற்றவர்கள். மக்களிடம் நன்மதிப்பு இருக்கும்.
மேன்மையான குணம் பொருந்தியவர்கள். தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர்கள். தூய்மையானவர்கள். பெரும் செல்வம் சம்பாதிப்பார்கள். இந்த எழுத்து பெயரின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ எங்கு வந்தாலும் சிறப்பான பலன்களையே தரும். என்றாலும், பெயரின் முதலில் வந்தால், மேற்கூறிய பலன்கள் அதிகமாக இருக்கும்.
 ஆதிக்க எண்: 3
 ஆதிக்க கிரகம்: குரு
நினைத்த காரியத்தை சாதித்துக் காட்டுவார்கள். காரியவாதிகள், ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்கள். தனது குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.
இவர்களுக்குப் புதிய புதிய சிந்தனைகள் உருவாகும். மற்றவர்களைப் பயன்படுத்தியே முன்னுக்கு வந்துவிடுவார்கள். பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள். முதலீடு இல்லாமல் முன்னேற்றம் அடைவார்கள்.
தந்திரசாலிகள். அரசியலில் ராஜதந்திரம் படைத்தவர்கள். வாக்கு சாமர்த்தியத்தால் யாரையும் மடக்கிவிடுவார்கள். தனது திறமையை முறையாகப் பயன்படுத்தி வெற்றி காண்பார்கள். பணம் படைத்தவர்களின் நட்பு இவர்களுக்குக் கிடைக்கும். வாதம் செய்வதில் திறமைமிக்கவர்கள். எதிரியை வசப்படுத்துவதில் திறமைசாலிகள். பொது அறிவு அதிகம் உடையவர்கள்.
 ஆதிக்க எண்: 4
 ஆதிக்க கிரகம்: ராகு
கூர்மையான அறிவும், கலைகளில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். திறமைக்கும் மேலாகப் பதவிகள் கிட்டும். கடினமான உழைப்பும், விடாமுயற்சியும் இருக்கும். ஆணித்தரமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் இவர்கள், ஒரு காரியத்தில் இறங்கினால், அதில் பிடிவாதத்துடன் செயல்படுவார்கள். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும். பொதுக் காரியங்களையும், முக்கியப் பொறுப்புக்களையும் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்றுக்கொண்டால், பிறர் உதவி இன்றித் தானே முன்னின்று திறம்படச் செய்து முடித்துவிடுவார்கள்.
மதிநுட்பம் கொண்ட இவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் வல்லவர்கள். தீர்க்கமான கருத்துக்கள் கொண்டவர்கள். சில நேரம், தொடர்ச்சியான கவலைகள் உண்டாகி, இவர்கள் மனதை வாட்டும். ஆனால், விரைவிலேயே அதிலிருந்து முற்றிலும் வெளிவந்துவிடுவர்.
ஓயாத உழைப்பும், விடாமுயற்சியும் இவர்களின் வெற்றிக்கான தாரக மந்திரங்களாகும். தன் கையே தனக்கு உதவி என்று இருப்பார்கள். சிறப்பான வெற்றிகள் கிட்டும். பிரமாதமான பேச்சாற்றல் கொண்டவர்கள். பொறுப்புள்ள மனிதராகத் திகழ்வார்கள். பஞ்சபூதங்களின் சூட்சுமம் அறிந்தவர்கள்.
 ஆதிக்க எண்: 5  
 ஆதிக்க கிரகம்: புதன்

இவர்களுக்கு  நண்பர்கள் அதிகம். தன் சுய அறிவின்படியே எல்லா காரியங்களையும் செய்வார்கள். உலகத்தில் உள்ள எல்லா சுகங்களையும் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க ஆசைப் படுவார்கள். போராடி வெற்றி பெறுவார்கள். சொன்ன சொல் தவறாதவர்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள்.
மற்றவர்கள் ஒரு சின்ன சுடு சொல் சொன்னால் கூடப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அன்பு,  நீதி, நேர்மை, உண்மை போன்ற எல்லா குணங்களிலும் சிறந்து விளங்குவார்கள். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவார்கள். இவர்களின் உடலிலும், மனதிலும் உணர்ச்சிகள் உந்தப்பட்ட வண்ணம் இருக்கும். மற்றவர்களை அடக்கியாளும் சக்தி உண்டு. சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். பலரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துவார்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
- தொடரும்...

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini