இன்று நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறர் ஏற்படுத்துகிற காலவிரயமான பேச்சுக்களை தவிர்ப்பது அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய தொழில் நுட்பம், யுக்தி பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.
ரிஷபம்:
இன்று உங்கள் மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். துவங்குகிற செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத் தொடர்பு பலன் பெறும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களை அன்புடன் வழி நடத்தி, திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர்.
மிதுனம்:
இன்று முன் யோசனையுடன் செயல்படுவீர்கள். எதிரி செய்த கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கையில், அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல தன்மைகளை பாதுகாப்பது நல்லது. உறவினர் வகையில் சீர்முறை செய்ய, அதிக பணம் தேவைப்படும். இயந்திரப் பிரிவில் பணிபுரிபவர்கள், பாதுக்காப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சிம்மம்:
இன்று உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நம்பகத்தன்மை இல்லாதவர்களிடம் சிரமங்களை சொல்வதால், ஒரு மாற்றமும் வராது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.
இன்று எதிர்கால வாழ்வில் நன்மை பெற, புதிய திட்டமிடுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சகோதரர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர்.
துலாம்:
இன்று உங்களின் கவனக்குறைவால், குறிப்பிட்ட செயல் நிறைவேறுவதில், தாமதம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிகாட்டும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடியை சரிசெய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகி எதிர்பார்த்த பணவரவைத் தரும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.
விருச்சிகம்:
இன்று உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உறுதித்தன்மை இருக்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறு வராமல் கவனமுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
தனுசு:
இன்று சில பணிகளை நிறைவேற்றுகிற கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் உற்பத்தி விற்பனையில் மந்தகதி இருக்கும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும்
மகரம்:
இன்று உங்கள் வாழ்வில் உருவாகிற தடையை, தகர்த்தெறிய தகுந்த பணிபுரிவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம்:
இன்று உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலன் பெறும். கூடுதல் சொத்து சேர்க்கை பெறுவீர்கள். இல்லறத்துணை அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.
இன்று உங்களின் சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படும். இனிய அணுகு முறையால் சில நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தகதியை சரிசெய்வது நல்லது. உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றவும். பணியாளர்கள் பெற வேண்டிய சலுகை கிடைப்பதில், தாமதம் இருக்கும்