விபூதி, சந்தணம், குங்குமம் ஆகியவற்றை திருவிளக்கின் உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் அடியின் கீழ் இரண்டும், அடியில் இரண்டமாக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும், அடுத்து மூன்று பொட்டும் முக்கண் மூர்த்தி ( சூரியன், சந்திரன், அக்கினி ) என கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுக்களும் கைகள், கீழே இடும் இரண்டு பொட்டுக்களும் திருவடிகளாகக் கருதி இந்ம எட்டு இடங்களில் பொட்டிடுவது தனிச் சிறப்புடையதாகும்.
எவர்சில்வர் விளக்கு விளக்குப் பூஜைக்கு உகந்தது அல்ல.
வீடுகளில் கூட எவர்சில்வர் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல.
வெள்ளி, பஞ்சலோகம், மண் விளக்குகள் பூஜைக்கு மிக உகந்தது.
ஐந்து முக விளக்குகள் மிகச் சிறந்தது.

0 Facebook:
Post a Comment