எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர்
நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர். எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.
சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்து : E,H,N,X
நன்மை தரும் தேதி : 5,14,23
நன்மை தரும் கிழமை : புதன், சனி
நன்மை தரும் நிறம் : சாம்பல், பச்சை
நன்மை தரும் திசை : வடக்கு
நன்மை தரும் தொழில் : எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்
நீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?
9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.
இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.
கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.
அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.
நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.
மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.
அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.
எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்து : C,G,L,S,U,V,W,A,J,Q,Y
நன்மை தரும் தேதி : 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30
நன்மை தரும் கிழமை : வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம் : சிவப்பு, மஞ்சள்
நன்மை தரும் திசை : தெற்கு, வடகிழக்கு
நன்மை தரும் தொழில் : நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,
விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,
பூஜை பொருட்கள், கார் விற்பனை,
ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்
0 Facebook:
Post a Comment