பஞ்ச பூதங்களின் தோற்றம்
பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின.
வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், மனமும் உண்டாயின.
தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன், அரி, அரன் என்று படைத்தல், காத்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப்படுகின்றார். பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயத்தின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.
கால அளவு
இதில் பிரம்மனின் பகல், இரவு பற்றி நான்கு யுகங்கள், யுகச் சந்திகள் பற்றி விளக்குவது, மனிதர்களின் கால அளவுகளும் தேவர்களுக்கான கால அளவுகளும் விவரிக்கப்படுவதே கால அளவு (அ) காலப் பரிமாணம் எனப்படுகிறது.
சிருஷ்டி
அனைத்துக்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ அளவோ கிடையாது. அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி, அதனையே அடைகின்றன. திருமால் பாம்பணையில் துயில் கொள்கையில் நான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன. அதைக் கண்டு அவர் பன்றியாக உருவெடுத்து (வராக அவதாரம்) நீரில் மூழ்கி அவற்றை மீட்டு வந்து முன் போல் அமைத்து சிருஷ்டிகளைத் தொடங்கலானார்.

பிரமன் சிருஷ்டியைத் தொடங்கி தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்து வகை சிருஷ்டிகள் அவரிடமிருந்து தோன்றின. அவை தமசு, மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் ஆகும். அடுத்து பசு முதலான விலங்குகள், தேவர்கள், மனிதர்கள், பூதம், பேய் முதலான சிருஷ்டிகள் தோன்றின. பின்னர் பிரம்மனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர், ருத்திரர் தோன்றினர். அவர்கள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடாமல் மகேசுவரனிடம் மனத்தைச் செலுத்தி அவனது தியானத்தில் ஈடுபட்டனர்.
அடுத்து பிரமன், புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர், தக்கன், வசிஷ்டர், ஆங்கிரசு, தருமர் ஆகிய பத்துப் பேரைத் தோற்றுவித்தார். அவர்கள் மூலம் உலகிலே சிருஷ்டியைப் பரப்ப சுவாயம்பு மனு என்ற ஆணையும், சதரூபை என்னும் பெண்ணையும் பிரமன் படைத்தார். இவ்வாறு சிருஷ்டி பெருகலாயிற்று. தக்கன் மகள் சசியை வையகம் அனைத்துக்கும் ஆதிகாரணனான ஈசன் மணந்தார். ஈசன் அனேக ருத்திரதைத் தோற்றுவித்தார்.
உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்தனர். சம்சார பந்தத்தில் சிக்காது, சிறப்பின்றி ருத்திரர்களை ஈசன் படைத்ததைக் கண்டு பிரமன் அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல என்று கூற, ஈசன் நீ குறிப்பிடும் சிருஷ்டிகள் எமக்கு ஏற்றதல்ல; அவற்றை நீயே படைப்பாயாக என்று பிரம்மனிடம் தெரிவித்தார். நான்முகன் மாயையைக் கொண்டு சிருஷ்டிகளை வகுத்தார். ருத்திரன் தாம் படைத்த சிருஷ்டிகளை யோகத்தால் உலகை விட்டு மறையச் செய்தார்.
இத் தளத்திற்கு வருகை தந்த வாசக நண்பர்களுக்கு நன்றி. தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு செல்லவும்
தொடரும்.................
இத் தளத்திற்கு வருகை தந்த வாசக நண்பர்களுக்கு நன்றி. தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு செல்லவும்

0 Facebook:
Post a Comment