Banner 468 x 60px

 

Monday, March 23, 2015

தித்திக்கும் வாழ்க்கை அமைய வரம் தரும் கல்யாண விரதம்

திருமண வாய்ப்பிற்காக ஏங்குபவர்கள் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமைய 'கல்யாண விரதம்' என்று போற்றப்படும் 'பங்குனி உத்திர விரதம்' கடைப்பிடித்து, அன்றைய தினம் வள்ளி மணாளப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்தை நோக்கிச் சென்று வழிபட்டால் பார்போற்றும் வாழ்வும் அமையும். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பாலுக்காக ஏங்குகிறது.

படிக்கும் பொழுது நூலுக்காக ஏங்குகிறது. பிறகு படித்து முடிந்ததும் வேலைக்காக ஏங்குகிறது. அதன் பிறகு வாழ்க்கைத் துணை வந்திணைய மாலைக்காக ஏங்குகிறது. அப்படி மாலைசூடும் வரனைத் தேடிக் கொடுக்க வரம் தரும் தெய்வங்களை நாடிச் சென்று தரிசனம் செய்ய, பரிகாரங்கள் நிறைய இருக்கின்றன.

எங்களை மணக்க ஒரு ராமன் வராவிட்டாலும், தூக்கிச் செல்ல ஒரு ராவணனாவது வரமாட்டானா? என்று முதிர் கன்னி ஒருவர் சொல்வது போல கவிஞர் ஒருவர் புதுக்கவிதை எழுதியிருந்தார். பெண்கள் ஏக்கப் பெருமூச்சு விடுமளவிற்கும், ஆண்கள் தனக்கு இணையான மனைவி அமையவில்லையே என்று வருந்தும் அளவிற்கும் காலம் மாறிவிட்டது.

வரதட்சனையினாலும், மற்ற காரணங்களாலும் வரன்கள் வராத காரணத்தால் கோவிலை தேடிச்செல்லும் கூட்டம் பெருகிவிட்டது. 03.04.2015 (வெள்ளிக்கிழமை) அன்று பங்குனி உத்திரத் திருவிழா வருகின்றது. அன்றைய தினம் முழுநாளும் விரதமிருந்து மாங்கனியை நைவேத்தியமாக வைத்து, மால் மருகனை வழிபட்டால் வாழ்க்கைத் துணை அமைய வழி பிறக்கும்.

அதுமட்டுமல்ல, வந்த வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மாற்றி ஒன்றாக இணைய வைக்கும். பங்குனி உத்திரத்தன்று அந்தப் பன்னிருகரத்தானை வழிபட்டால் முன்னேற்றங்கள் வந்து சேரும். வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து கூடும். சண்முகனை வழிபட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும். சிங்கார வேலவனை வழிபட்டால் மங்காத புகழ் கூடும்.

அன்றைய தினம் இல்லத்து பூஜையறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் வைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது. குத்து விளக்கின் கீழே இடும் கோலம் பின்னல் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக்கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண சதுரங்கள் அமைந்த கோலங்கள் போட வேண்டும்.

கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் புள்ளி எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். மாங்கனி கிடைத்தால் மாங்கனி, இல்லையேல் தேன் கதலி வைத்து அதை நாமே சாப்பிட வேண்டும். பிறகு முருகப்பெருமான் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். 'வேலை வணங்குவதே வேலை' எனச் சொல்லும் பக்தர்களின் விவகாரங்கள் விலகவும், விவாகம் முடியவும் முருகன் சன்னிதியில் சென்று

தள்ளாத கிழவனாய் குறவள்ளி கரம்பற்றத் 
தனியாக வந்த பெருமான்! 
தனதனெனும் சந்தத்தை அருணகிரிநாதருக்குத் 
தயங்காமல் கொடுத்த பெருமான்! 
சொல்லுக்குச் சுவைதந்த அவ்வைக்கும் ஒருநாளில் 
சுட்ட பழம் ஈந்த பெருமான்! 
சுடுபொறிகள் ஆறாகிச் சிவனுடைய நெற்றியினில் 
சுகமாகப் பிறந்த பெருமான்! 
புள்ளிமயி லேறிவரும் வள்ளிமண வாளனை நீ 
போற்றிக் கொண்டாடு மனமே! 
பொருளோடும், அருளோடும் புவிமீது விளையாடும் 
புகழோடு செல்வம் மிகுமே!

என்ற பாடலைப் பாடி வழிபட்டால் முருகப் பெருமான் முன்வந்து வரம் தருவான். பல தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. மன்மதன் உயிர் பெற்ற நாளும் பங்குனி உத்திரம். மக்களைக் காக்கும் சிவன் உமையவள் மணம்புரிந்த நாளும் உத்திரம் என்று சொல்லப்படுகின்றது.

எனவே இந்த இனிய நாளான ஏப்ரல் 3-ம் தேதியன்று விரதமிருந்து கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம் நைவேத்தியம் செய்து கவசம் பாடி வழிபட்டால் கல்யாண மாலை வரும் வாய்ப்பு கிட்டும்.
Read more...

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது - அதற்கான பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன அது எதனால் ஏற்படுகிறது அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவு இது கடும் பாவம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், மனைவி, பெற்றோரை கவனிக்காமல் விடுபவர்கள் என முற்பிறவி கர்மாக்களால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து அதில் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

ஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இவ்வகை தோஷம் பிடித்தவர்கள் சரியான காலத்தில் எதுவும் கிடைக்காமல் திருமணம், குழந்தை, வேலை என எதுவுமே சரியாக அமையாமல் எல்லாவற்றிலும் கடும் துன்பங்களையும் காரியத்தடங்களையும் கொடுத்துகொண்டே இருக்கும்.

பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Read more...

பாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்

மது சொந்த ஊரிலோ அல்லது மற்ற இடத்திலோ நமக்கு சொந்தமான வீடுகளோ, கடையோ பராமரிக்க முடியாமல் பாழடைந்து கிடக்கும். இப்படிப்பட்ட இடங்கள் லட்சுமி கடாட்சம் கிடைக்காமல் அருள் இழந்து இருக்கும்.

அப்படிப்பட்ட இடத்திற்க்கு லட்சுமி கடாட்சம் கிடைத்து அந்த இடம் மீண்டும் புதுப்பொழிவு பெறுவதற்கு இரட்டைக்கண் தேங்காய் ஒன்றை வாங்கி பாதியாக உடைத்து அதில் மஹாலட்சுமி எந்திரம்-அஞ்சனம்-எழுமிச்சைபழம் பாதியாகவெட்டி உள்ளே வைத்து மூடி அதை கட்டி பாழடைந்த நம் இடங்களில் புதைத்து வைக்கவேண்டும் 48 நாட்களுக்கு பிறகு அந்த இடத்தில் ஐஸ்வர்யம் பெருகி அந்த இடம் நல்ல விருத்திக்கு வரும்.
Read more...

நவக்கிரக தோஷம் விலகும் நவகிரக லிங்க வழிபாடு

சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் தில்லை நடராஜப் பெருமானையும் திருமூலட்டானரையும் வான் பொருளையும் வணங்கித்தொழுத பின்னர் ஒவ்வொருவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் லிங்க மெய்ப்பொருளை பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்தனர்.

இவர்களது பூஜை புரிந்த லிங்க கல் உள்ள சன்னதி நவகிரக லிங்க சன்னதி என்று வழங்கப்படுகின்றன. இந்த ஒன்பது லிங்கங்களையும் சன்னதியின் வாசல் வழியாகத் தரிசனம் செய்வது மட்டுமின்றி ஒன்பது துவாரங்களின் வழியேயும் தரிசிக்கலாம்.

நவகிரக லிங்க சன்னதி சிதம்பரம் கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. நவகிரக தோஷம் உள்ளவர்கள் இந்த நவகிரக லிங்கங்களை வழிபட்டால் தோஷம் அனைத்தும் நிவர்த்தியாகி நன்மை உண்டாகும். சிவபூஜை செய்த நவகிரகங்களுக்குச் சன்னதி பிரகாரத்தில் உள்ளது.

Read more...

சோமவார விரதம் கடைபிடிப்பது எப்படி?

சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம்.

இந்த பூஜைகளுக்கு, மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலைப்பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து) பஞ்சாமிர்தம், திராட்சை, கற்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். விடியற்காலையிலேயே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனகுங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

பின்னர் பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களை சொல்ல வேண்டும். பின்னர் தீபாராதனை கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.



Read more...

Wednesday, March 18, 2015

Ayyappan Song

Read more...

காத்தவராயர் ஆலயம் புங்குடுதீவு - 9

Read more...

Thursday, March 12, 2015

காரியத்தடைகள் நீங்க பிள்ளையார் துதி

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

- இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் முன்

இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.

Read more...

நன்மை தரும் மகாலட்சமி விரதம்

காலட்சுமியை மிக எளிதாக வழிபடலாம். மிகுந்த பிரயாசை எல்லாம் தேவையில்லை. கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும்.

வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும். பின்  சாண அகலில்  நெய் விட்டு, பஞ்சுத் திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக்கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும்.

தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும். பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.

ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.
Read more...

Tuesday, March 3, 2015

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்

பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும்.இத்தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு பெயர்கள் உண்டு.

நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும் பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் பெயர் பகவதியார்.

இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு, இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க, பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால் வேதநெறி குன்றியது.

இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும் திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன. சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும் அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச் சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப் பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர்.

இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம் பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர். திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர் இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத் திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார்.

செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும் பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன் பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும், அணிமிகும் தொட்டிலிலும் விளையாடினான்.

செங்கீரை, சப்பாணி, அம்மானை முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப் பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல் வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று.

 வழக்கம்போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப் புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப் பழிக்கக் கூறி நின்றான்.

மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர் தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக் குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.

குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே  சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார்.

அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர். ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால் வழிவதனையும் கண்டார்.

அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை கடுங்கோபத்தோடு பார்த்தார். கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று  மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது.

 சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார்.

தாம் பாடும் தமிழ்மறை பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார். செயலற்று நின்றார்.

அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக் கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால் உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக் கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார்.

 தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது. ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின் வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய திறத்தினை மொழிந்தார்.

தொடரும் ..........
Read more...

அபிராமி அந்தாதி தொடர்ச்சி 1

1. ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

பொருள்: 

உதிக்கின்ற செங்கதிரோனும் நெற்றியின் மையத்திலிடுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் பெற்றவர்களே மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய இலக்குமி துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென்மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்றதென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு மேலான துணையாவாள்.
Read more...

Monday, March 2, 2015

தேவாரம்

பாடியவர் -  திருஞானசம்பந்தர்

பாடிய தலம் -  திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில்) சீர்காழி

                             திருச்சிற்றம்பலம்

 தோடுடைய செவியன்விடை யேறியோர்
     தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
    உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
    ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
    பெம்மான்இவன் அன்றே.

                            திருச்சிற்றம்பலம்

பொருள் -  தோடு என்னும் அணியை அணிந்துள்ளவர், உமாதேவியை இடப்பாகம் உடையவர்   இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய பூசிய சிவபெருமான் என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !
Read more...

Sunday, March 1, 2015

அபிராமி அந்தாதி

ம்பிகையைப் பற்றிய ஓர் அற்புதமான பாடல். இதை எழுதியவர், அம்பிகையை நேரில் தரிசித்த அபிராமி பட்டர். இவர் பெயரைச் சொன்னதும், அபிராமி அந்தாதிதான் நினைவுக்கு வரும். அபிராமி அந்தாதி உயர்ந்ததுதான். சந்தேகம் இல்லை. ஆனால், அதில் உள்ள பல பாடல்களுக்கு விளக்க உரை இருந்தால்தான் அர்த்தம் புரியும். ஆனால், படிக்கும்போதே எளிமையாகப் பொருள் புரியும் வண்ணம், அதேநேரம் நேருக்கு நேராக அம்பிகையிடம் முறையிடும் விதமாக அமைந்துள்ள பல பாடல்களையும் அபிராமி பட்டர் எழுதியுள்ளார்.

அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.

 "தனம் தரும்' என்ற பாட்டில் அபிராமி தேவி அன்பர்களுக்கு "நல்லன எல்லாம் தரும்' என்று மொழிந்து, விரிவாகப் பாடிய அபிராமி பட்டர், "நூற்பயன்' பாட்டில் ரத்னச் சுருக்கமாக அருளியுள்ளார்.  அபிராமி தேவியை வழிபடுவார்க்கு ஒரு துன்பமும் வராது என்று உறுதியுடன் கூறுகிறார். ""முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே'' எனக் குறிப்பிடுகிறார்.

அவள் உலகத்தைப் படைத்த தாய்; பராசக்தி. அவள் புகழ், பூத்த மலரின் புதுமணம்போல் எங்கும் பரவி நிறைந்திருக்கிறது. அவள் மாதுளம் பூ போன்ற இளம் சிவப்பு நிறமுடையவள். உலக உயிர்கள் அனைத்தையும் காத்தருள்கின்றவள். ஐந்து மலர்க் கணைகள், பாசம், அங்குசம், கரும்பு இவைகளை அழகிய கைகளில் சேர்த்தவள். கதிரவன், மதி, கனல் மூன்றையும் கண்களாகக் கொண்டவள்.

 இத்தகு சிறப்புடைய அபிராமியை வணங்கித் துதிப்பவர்க்கு ஒரு சிறு துன்பங்கூட வரவே வராது என உறுதிபடக் கூறுகிறார் அபிராமி பட்டர். அபிராமிபட்டர் "ஒரு தீங்கில்லையே' என நூற் பயனைப் பற்றி வரும் பாட்டில் சொல்லியிருக்கிறார்.

 இருள் இல்லை என்றால் வெளிச்சம்தான். தாழ்வு இல்லையென்றால் வாழ்வுதான். ""ஒரு தீங்கில்லையே'' என்றால் ""எல்லாம் நன்மையே'' என்பதுதான் பொருள்.

அபிராமி அந்தாதி வழி, அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்கலங்களே பொங்கி வரும். மாசற்ற வாழ்க்கை அமைந்து அவர்கள் தேசுடன் புகழ் வீசும் வண்ணம், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள் என்று நிறைவு செய்கிறார் அபிராமி பட்டர்.

இருளிலிருந்து ஒளிக்கும் பொய்மையிலிருந்து சத்தியத்துக்கும் பிறப்பு-இறப்பிலிருந்து பெருவாழ்வுக்கும் அழைத்துச் செல்லும் நூல்.   அபிராமி அந்தாதியை நாள்தோறும் மறவாமல் பயின்று நலன்களுடன் வாழ்வோம்.


கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்:  கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்தபிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புமிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!

தொடரும் ...........
Read more...

ஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்

ழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.

சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.

சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும்.

10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும். உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.

கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.

சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம்,

செவ்வாய்- மஜ்ஜை,

புதன்- தோல்,

வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி,

சனி- நரம்பு மண்டலம்.

அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம். மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.

இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.
Read more...

ஷிர்டி பாபா புனிதத் திருச்சரிதம் பகுதி - 9

நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன்? பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா... நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள்.

தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை!.

பாபாவின் விளக்கத்தைக் கேட்ட அடியவர்கள் உருகினர். எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை இங்கிருந்தே காப்பாற்றத்தான் பாபா தன் கரத்தைச் சுட்டுக் கொண்டார் என்றறிந்து அவர்களின் நெஞ்சம் விம்மியது. மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார் பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர். கடவுள் மனித உடல் எடுத்தால், அந்த உடலின் உபாதைகள் அவருக்கும் இருக்குமே! வெந்துபோன கரத்தின் வேதனையை பாபா தாங்கவேண்டி இருக்குமே! என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய்! அவர் உள்மனம் அழுது  அரற்றியது.

பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை அவருக்குத் தெரியும். நெருப்புக் காயங்களுக்குச் சிகிச்சை செய்வதில் வல்லவர் அவர். அவரிடம் விஷயத்தைச் சொல்லி பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அவரை அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், ஷிர்டி வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார்.  ஆனால், பாபாவிடமிருந்து கலகலவென ஒரு சிரிப்புத்தான் எழுந்தது.

அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்கும் பாபாவுக்குத் தன் உடல் பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை போலும்! பக்தர்களின் நோயையெல்லாம் தீர்க்கும் பாபா விரும்பியிருந்தால் தன் கைக் காயத்தையும் உடனே சரி செய்துகொண்டிருக்க முடியும். ஏனோ அதையும் அவர் விரும்பவில்லை. அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே? ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை.

உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!. கற்கண்டைப் போல் தித்திக்கும் பாபாவின் அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். பாபாவின் அடியவர்களில் ஒருவர் பாகோஜி ஷிண்டே. அவர் ஒரு குஷ்டரோகி. முன்வினை குஷ்டரோகமாக வந்து அவரைப் பீடித்திருந்தது. பாபாவின் சந்நிதியில் தன் வேதனைகளை மறந்து அவர் வாழ்ந்து வந்தார்.

 நோயுற்ற உடல் காரணமாக அவர் துரதிர்ஷ்டசாலி என்றாலும், இன்னொரு வகையில் அவர் பெரும் அதிர்ஷ்டசாலி. பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் காதாரக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார். அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார். வெந்திருந்த அதில் நெய்பூசி நன்றாகத் துடைத்துவிட்டார்.

பாபா மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார். இது ஏதோ அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறை. மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த தெய்வம், தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பக்தர்கள் விண்ணப்பித்ததன் பேரில், பாபா தம் கரத்தையும் குணப்படுத்திக் கொண்டார்.

 பாபா முழுமையான ஒரு சித்தர். அவர் விரும்பியிருந்தால் தம் கரத்தை ஒரு நொடியில் சரிசெய்து கொண்டிருக்க முடியும். ஆனால், தம் பக்தர்கள் சுயநலத்தைத் துறந்து பிறரின் பொருட்டாக வேதனைகளைத் தாங்க முன்வரவேண்டும் என்று போதிக்க விரும்பினார். வார்த்தைகளால் அல்லாமல், ஒரு நிகழ்ச்சி மூலமே அந்த போதனையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.

பாபாவின் அடியவர்கள், சுயநலத்தைத் துறந்து பிறர் நலனுக்காக வாழவேண்டும் என்ற படிப்பினையைப் பெற்றார்கள். அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம் என்ற பாடலில் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் என அருட்பெரும் ஜோதியின் தனிப்பெருங் கருணையைப் பாடிப் பரவுகிறார் வள்ளலார். அடியவர் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றிக் கொடுப்பதல்லவா கடவுளின் கருணை! அப்படி அடியவர்கள் வேண்டிய வரத்தை அவர்களுக்கு வழங்கும்போது இறைவன் புரியும் லீலைகள் பல.

அத்தகைய ஒரு லீலை பாபாவால், நானா சாஹேப் சாந்தோர்கரின் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. திடீரென சாந்தோர்கருக்கு பண்டரிபுரத்திற்கு மாற்றலாகும் உத்தரவு வந்து சேர்ந்தது. அவரைப் பொறுத்தவரை அவருக்குக் கைலாயம், வைகுண்டம் எல்லாம் ஷிர்டிதான். இப்போது பண்டரிபுரம் போக வேண்டியிருக்கிறதே? பகவான் பாபாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு போகலாம். அவர் எண்ணப்படித் தானே எல்லாம் நடக்கிறது? பாபா, தாம் பண்டரிபுரம் போக வேண்டும் என்று விரும்புகிறாரா! இல்லையா? இந்த ஊர் மாற்றம் எனக்கு நல்லதுதானா? நான் என்ன செய்ய வேண்டும்? உடனே பண்டரிபுரம் புறப்பட வேண்டியதுதானா?

 எதுவும் முடிவுசெய்ய இயலாத அவர் ஷிர்டி நோக்கி நடக்கலானார். ஷிர்டியிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நீம்காவன் என்ற ஊரை அவர் அடைந்தார். சாந்தோர்கர் ஷிர்டியை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில், பாபா தங்கியிருந்த ஷிர்டி மசூதியில் திடீரென ஒரு பரபரப்பான சூழல் தோன்றியது. மகல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் உள்ளிட்ட அடியவர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த பாபா, சட்டெனப் பேச்சை நிறுத்தினார். அடியவர்கள் வியப்போடு பாபாவை கவனிக்கத் தொடங்கினார்கள்...
Read more...

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

மசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும்,  ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது  பஞ்சாசர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது  பஞ்சாசர  மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு  காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது  ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது  நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது. ஐந்தாவது திருமுறை, அதன்  நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாய நம என்ற   பஞ்சாசர  மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது.

ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம்  ஆகும். அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது  பஞ்சாசர  மந்திரமே. உயிர்கள் என்று  துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர்.

தூல  பஞ்சாசரம்   - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம்  - சிவாயநம
காரண பஞ்சாசரம்  - சிவ(õ)ய சிவ.
மகாகாரண பஞ்சாசரம்  - சிவ.
மகாமனு பஞ்சாசரம்  - சி.

தூல பஞ்சாசரம்  - நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும். மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி - ந
திருஉந்தி - ம
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி - ய

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான் ஞானிகளும் அப்பர்.  சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.

சூக்கும பஞ்சாசரம்  - சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார். இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை  அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர். உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில்  திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது.

நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தே சூக்கும பஞ்சாசரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.

வா - தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்.

ய - அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.

ந - அனலேந்திய இடக்கரம்.

ம - முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின்  இரண்டாவது படி இது.

காரண பஞ்சாசரம்  - சிவயசிவ

ய என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம் போடுகூடிய  நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாசரம்  - சிவசிவ

சிவசக்திக்குள்ளே ய கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் சிவனும் தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாசரம்  - சி

சி என்பது மகாமனு பஞ்சாசர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் என்னும் அருள் சக்தியும் என்னும் உயிரும் என்னும் மறைப்பாற்றலும்  என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில் திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர  ஜெபமுறைகள் கூறப்பட்டுள்ளன. மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும் கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம். பிறர்  அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உலக இன்பத்தை மட்டும் துய்க்க வேண்டுமென விரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதலாம்.

உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி, உமது அருளால் ஆட்கொண்டு  அருளல் வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

ந ஆகிய திரோதன சக்தி ம என்ற மலத்தை ஒழித்து, அதுவே வ ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்ட  பஞ்சாசரத்தைவிட மேலான தாரக மந்திரம் வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப நிஷதம்  கூறுகின்றது.
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini